WhatsApp from Meta என்பது 100% கட்டணமில்லா மெசேஜிங் செயலியாகும். இதை 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இது எளிமையானது, நம்பகமானது மற்றும் தனிப்பட்டது. இதன் மூலம் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் எளிதாகத் தொடர்புகொள்ளலாம். WhatsAppஐ மொபைல், டெஸ்க்டாப் ஆகியவற்றில் சந்தாக் கட்டணம்* எதுவுமின்றி பயன்படுத்தலாம். இணைப்பு வேகம் மெதுவாக இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.
உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தனிப்பட்ட மெசேஜ்களும் அழைப்புகளும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. WhatsApp உட்பட, உங்கள் அரட்டைகளில் பங்கேற்காத எவராலும் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது.
*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். மேலதிக விவரங்களுக்கு உங்கள் சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளுங்கள்.
---------------------------------------------------------
கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், WhatsApp > அமைப்புகள் > உதவி > எங்களைத் தொடர்புகொள்க என்பதற்குச் செல்லுங்கள்