உயர் செயல்திறன் படிமக் கோப்பு (HEIF) வடிவமைப்பைப் பயன்படுத்தும் கோப்புகளைப் படிக்கும் மற்றும் எழுதும் வசதியை Windows 10 சாதனங்களுக்கு HEIF படிம நீட்டிப்பு அளிக்கிறது. அந்தக் கோப்புகள் .heic அல்லது .heif கோப்பு நீட்டிப்பைக் கொண்டிருக்கலாம்.
.heic கோப்பு நீட்டிப்பைக் கொண்டிருந்து, HEIF கோப்புகளாகச் சேமிக்கப்பட்ட படிமங்கள், HEVC வடிவமைப்பைப் பயன்படுத்தி சுருக்கப்படும். இத்தகைய கோப்புகளுக்கு HEVC வீடியோ நீட்டிப்புகள் தொகுப்பு நிறுவப்பட வேண்டும். HEVC வீடியோ நீட்டிப்புகள் தொகுப்பு நிறுவப்படவில்லை எனில், HEIF படிம நீடிப்பால் .heic கோப்புகளைப் படிக்கவோ அல்லது எழுதவோ முடியாது.