OneNote என்பது உங்கள் சாதனங்கள் அனைத்திலும் வேண்டியவற்றைப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துவதற்கான டிஜிட்டல் குறிப்பேடு ஆகும். உங்கள் யோசனைகளைக் குறித்துக் கொள்ளலாம், வகுப்பறை மற்றும் சந்திப்புக் குறிப்புகளைக் கண்காணிக்கலாம், இணையத்திலிருந்து தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது செய்ய வேண்டியவை பட்டியலைத் தயாரித்துக்கொள்ளலாம், உங்கள் யோசனைகளை படங்களாக வரையலாம், ஸ்கெட்ச் செய்யலாம்.
தட்டச்சு செய்யுங்கள், எழுதுங்கள் மற்றும் வரையுங்கள்
* பக்கத்தில் எந்த இடத்திலும் எழுதி, உங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுங்கள்
* பல வகை பேனாக்கள் மற்றும் ஹைலைட்டர்களைக் கொண்டு எழுதவும் வரையவும் உங்கள் சாதனத்தின் பேனா அல்லது உங்கள் விரலைப் பயன்படுத்தலாம்.
* வெள்ளைப் பின்புலத்தில் குறிப்புகளை எழுதலாம் அல்லது எளிதாக வரையவும் எழுதவும் ஏற்ற கட்டம் அல்லது கோடிட்ட வரிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்
எதையும் பதிவுசெய்யுங்கள்
* Windows செயல் மையத்திலும் ஆதரிக்கப்படும் பேனாக்களிலும்* உள்ள 'குறிப்பு' பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், விரைவாக குறிப்புகளை எடுக்கலாம்
* Share Charm, Microsoft Edge, Clipper, Office Lens மற்��ும் ஏராளமான பிற பயன்பாடுகளையும் சேவைகளையும் பயன்படுத்தி வலைத்தளங்கள், செய்முறைகள், ஆவணங்கள் மற்றும் பலவற்றை OneNote-க்கு அனுப்பலாம்
அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்
* கையால் எழுதப்பட்ட இங்க் மற்றும் படங்களிலுள்ள உரை உட்பட, உங்கள் குறிப்புகளிலுள்ள எதையும் தேடிக் கண்டுபிடிக்கலாம்.
* உங்கள் மிகச் சமீபத்திய குறிப்புகளை விரைவாக அணுகலாம், ஒவ்வொரு பக்கத்தின் முன்னோட்டப்பார்வைகளைப் பயன்படுத்தி அவற்றை நிறைவு செய்யலாம்
* தேர்வுப் பெட்டிகளுடன் கூடிய செய்ய வேண்டியவை பட்டியல்களை ஒரே-கிளிகில் அணுகலாம்
கூட்டுப்பணிக்காகவே உருவாக்கப்பட்டது
* உங்கள் குறிப்பேடுகள் மற்றும் குறிப்புகளை சகபணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எளிதில் பகிரலாம்
* விடுமுறைகளைத் திட்டமிடுங்கள், கூட்டக் குறிப்புகள் அல்லது விரிவுரைக் குறிப்புகளை உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிரலாம்
* குறிப்புகளை ஒன்றாகத் திருத்தலாம், மாற்றங்கள் நிகழும்போதே பார்க்கலாம்
எப்போதும் உங்களுடனே இருக்கும்
* நீங்கள் வீட்டில், அலுவலகத்தில் அல்லது பயணத்தில் என எங்கிருந்தாலும் உங்கள் குறிப்புகள் உங்களுடனே பயணிக்கும்
* குறிப்புகள் கிளவுடில் தானாகச் சேமிக்கப்படுகின்றன மற்றும் ஒத்திசைக்கப்படுகின்றன, ஆகவே உங்கள் சாதனங்கள் அனைத்திலும் எப்போதும் சமீபத்திய குறிப்புகளே இருக்கும்
* உங்கள் குறிப்பேடுகள் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் பரிச்சயமானதாகத் தோன்றுகின்றன, ஆகவே உங்கள் திரைப்பலகம், டேப்ளெட் அல்லது மொபைல் சாதனம் ஆகிய எதிலிருந்தும் விட்ட இடத்திலிருந்து நீங்கள் தொடரலாம்
வலைத்தளத்தைப் பாருங்கள், Facebook-இல் எங்களுக்கு விருப்பம் தெரிவியுங்கள், எங்களை Twitter-இல் பின்தொடருங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு இந்த வலைப்பதிவைப் பார்க்கவும்: onenote.com facebook.com/onenote twitter.com/msonenote blogs.office.com/onenote
onenote.com
facebook.com/onenote
twitter.com/msonenote
blogs.office.com/onenote
*சில துணைசாதனங்கள் தனியாக விற்கப்படுகின்றன; வன்பொருளைச் சார்ந்தவை.