கேமரா பயன்பாடானது இப்போது இன்னும் வேகமாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது. Windows 10 இயங்கும் எந்தவொரு PC அல்லது டேப்ளட் மூலமும் தானாகவே சிறந்த படங்களை எடுக்கலாம்.
• வீடியோவைப் பதிவுசெய்யும் போது, நீங்கள் விரும்பும் போதெல்லாம் இடைநிறுத்தலாம், மறுதொடங்கலாம்—கேமரா பயன்பாடானது அவை அனைத்தையும் ஒரே வீடியோவாகத் தானாகவே மாற்றுகிறது, அதனால் சலிப்பூட்டும் பகுதிகளைத் தவிர்த்து, முக்கியமானதை மட்டும் தக்கவைக்கலாம்.
• உங்களை நீங்களே படமெடுக்க டைமர் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.
• சட்டகக் கட்டம் மூலம் சிறப்பான படங்களைக் கட்டமைக்கலாம்.
• தானாகவே உங்கள் புகைப்படங்களை OneDrive-க்கு மறுபிரதி எடுத்து, உங்கள் தொலைபேசி உள்ளிட்ட எந்தச் சாதனத்திலும் அவற்றைப் பெறலாம்.
அத்துடன் உங்கள் வன்பொருள் ஆதரித்தால், இவற்றையும் செய்யலாம்:
• வெள்ளைபலகையில் உள்ள அனைத்தையும் எழுதி எடுப்பதற்குப் பதிலாக, அதைப் படமெடுத்து நேரத்தைச் சேமியுங்கள்—அந்தப் படத்தை கேமரா தானாகவே படிக்கக்கூடியதாக மாற்றிவிடும். *(1,2)
• ஸ்கேனரைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். எந்த ஆவணத்தையும் படமெடுங்கள் போதும்—புதிய முறைகள் புகைப்படத்தை மேம்படுத்துவதால் அதன் வாசிக்கும்தன்மையும் கூடுகிறது. *(1,2)
• பனோரமா மூலம் காட்சியை இன்னும் விரிவாகப் படமெடுங்கள். *(1,2)
• டிஜிட்டல் வீடியோ நிலைப்படுத்தல் மூலம் உங்கள் கைகள் ஆடினாலும் கூட ஸ்மூத்தான வீடியோக்களைப் படமெடுங்கள். *(4)
• HDR (உயர் டைனமிக்) அம்சத்தின் மூலம் அதிக வெளிச்சமான அல்லது இருண்ட பகுதிகளிலும் சிறப்பான வண்ண மாறுபடும், சிறப்பான விவரமும் கொண்ட படங்களை எடுங்கள். *(4)
*1 உலகை நோக்கும் கேமரா தேவை
*2 1080p அல்லது மேம்பட்ட தெளிவுத்திறனை ஆதரிக்கும் கேமரா தேவை
*3 4K தெளிவுத்திறனை ஆதரிக்கும் கேமரா தேவை
*4 வன்பொருள் ஆதரவு கொண்ட தேர்ந்தெடுத்த சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது