Xbox பயன்பாடு, Xbox One மற்றும் Windows 10 சாதனங்களுக்கிடையே உங்கள் நண்பர்கள், விளையாட்டுகள், மற்றும் சாதனைகளை ஒருங்கிணைக்கிறது. மிகச் சிறந்த மல்டிபிளேயர் கேமிங் இப்போது இன்னும் சிறப்பாகியுள்ளது.
• கிளப்களில் இணையுங்கள் - அல்லது உங்களது சொந்த கிளப்பை உருவாக்குங்கள் - அங்கு சென்று நண்பர்களுடனும் உங்களைப் போன்ற பிற கேமர்களுடனும் விளையாடலாம், அரட்டையடிக்கலாம்.
• Looking for Group பதிவுகளைச் சரிபார்த்து ஒத்த மனதுடைய பிளேயர்களுடன் கேம்களைக் கண்டுபிடிக்கலாம், அல்லது உங்களுடைய சொந்த இலக்குகளுக்கும் விளையாடும் ஸ்டைலுக்கும் பொருத்தமான ஒன்றைப் பதிவிடலாம்.
• PC மற்றும் Xbox One -க்கு இடையே அரட்டை, பகிர்தல், பார்ட்டிகள், Game DVR, மற்றும் சாதனைகளுக்கு உடனடி அணுகலைப் பெறுங்கள்.
• உங்கள் விளையாட்டுக் கிளிப்புகளையும் ஸ்கிரீன்ஷாட்களையும் தொடர்ந்து கண்காணிக்கலாம், அதோடு அவற்றை உங்கள் Windows 10 PC -க்கு நேராகப் பதிவிறக்கலாம்.
• Xbox Live -இல் நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு ஒரு விசைப்பலகையைப் பயன்படுத்தி அரட்டையை மெதுவாக்கும் தடைகளை உடையுங்கள்.
• உங்கள் Xbox One கண்ட்ரோலரைப் பயன்படுத்தும்போது, உங்களுக்குப் பிடித்த கேம்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் Xbox One -இலிருந்து ஒரு Windows 10 PC -க்கு ஸ்டிரீம் செய்யுங்கள்.
பொறுப்புத்துறப்பு: அகலக்கற்றை இணையச்சேவை தேவை (ISP கட்டணங்கள் பொருந்தும்). ஆதரிக்கப்படும் கேம்களுடன் மட்டுமே Xbox Live அம்சங்கள் கிடைக்கும். Xbox One -இல் ஆன்லைன் மல்டிபிளேயர் (மல்டிபிளேயர்களுக்கு ஸ்டிரீமிங் உள்ளிட்ட) மற்றும் Game DVR -இன் சில அம்சங்களுக்கு Xbox Live Gold சந்தா (தனியாக விற்கப்படுகிறது) தேவை. ஒரு நேரத்தில் ஒரு சாதனத்திற்கு மட்டுமே ஸ்டிரீம் செய்யவும்.