Microsoft Excel Mobile என்பது Windows போன்கள் மற்றும் டேப்ளட்களில் (10.1 அங்குலம் அல்லது சிறிய திரை அளவுள்ள) விரிதாள்களை மதிப்பாய்வு செய்தல், புதுப்பித்தல் மற்றும் உருவாக்குதலுக்கு மிகச் சிறந்த பயன்பாடாகும். *ஜனவரி 12, 2021 இந்தச் செயலி Windows 10 Mobile பயன்படுத்தி தொலைபேசிகள் ஆதரவு இறுதியில் சென்றடையும். https://aka.ms/OfficeWindows10MobileEOS இல் மேலும் அறிக.*
***திரைப்பலகங்கள், மடிக்கணினிகள், பெரிய டேப்ளட்கள் போன்றவற்றிலும் தொலைபேசிகளுக்கான Continuum* உடனும் விரிதாள்களை உருவாக்கவும் திருத்தவும் Office 365 சந்தா தேவை. கூடுதல் தகவலுக்கு, பின்வரும் தேவைகளைப் பாருங்கள். ***
எங்கும் விரிதாள்கள்
• விரிதாள்கள் உங்கள் தொலைபேசியிலும் டேப்ளட்டிலும் சிறப்பாகத் தோன்றுகின்றன: சூத்திரங்கள், விளக்கப்படங்கள், அட்டவணைகள் மற்றும் நிபந்தனைக்குரிய வடிவமைப்பு ஆகியவை எல்லாம் அங்குள்ளன.
• நீங்கள் விட்ட இடத்திலிருந்தே தொடருங்கள்: நீங்கள் சாதனங்களுக்கு இடையில் மாறினால் கூட, எங்கே இருந்தீர்கள் என்பதை Excel நினைவில் வைக்கிறது.
எந்த இடத்திலும் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் புதுப்பிக்கலாம்
• எந்த இடத்திலிருந்தும் உங்கள் கோப்புகளைப் பெறுங்கள், OneDrive, SharePoint மற்றும் Dropbox ஆகியவற்றுடனான ஒருங்கிணைவுக்கு நன்றி.
• உங்கள் விரலின் தொடுகை மூலம் விரைவான மாற்றங்களைச் செய்யலாம். நெடுவரிசைகளை இழுக்கலாம் மற்றும் பணித்தாள்களை நகர்த்தலாம். தரவைச் சேர்க்க, விளக்கப்படங்களை வடிவமைக்க மற்றும் பெரிய விரிதாள்களை வழிசெலுத்த, தட்டுங்கள்.
• சேமிப்பதைப் பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் டேப்ளட் அல்லது தொலைபேசியில் திருத்தும் போது, உங்கள் வேலையை Excel சேமிக்கிறது, ஆகவே நீங்கள் சேமிக்கத் தேவையில்லை.
• ஒரு சில தட்டல்களுடன் விரிதாள்களைப் பகிரலாம் மற்றும் அவற்றை மதிப்பாய்வு செய்யுமாறு மற்றவர்களை அழைக்கலாம்.
• சரியான கட்டளையை வேகமாகக் கண்டுபிடிக்கலாம். என்னிடம் கூறு உங்களுக்குத் தேவையான அம்சத்திற்கு உங்களை கொண்டுசெல்லும்.
நம்பிக்கையுடன் உருவாக்குங்கள்
• பெரிய திரையில் விரிதாள்களைத் திருத்தவும் மதிப்பாய்வு செய்யவும் உங்கள் தொலைபேசியை ஒரு PC-ஆகப் பயன்படுத்துங்கள்.
• நேரத்தைச் சேமிக்கும் வார்ப்புருக்களைப் பயன்படுத்தி உங்கள் திட்டப்பணிகளை விரைந்து தொடங்குங்கள்.
• அதனுள்ளேயே பொதுவான செயல்பாடுகள் உள்ளமைந்துள்ள ஆன்ஸ்கிரீன் விசைப்பலகையுடன் சூத்திரங்களைச் சேர்க்கலாம்.
• உங்கள் யோசனைகளை வெளிப்படுத்த, பரிச்சயமான, உயர் வடிவமைப்பு மற்றும் தளவமைப்பு விருப்பங்களைப் பயன்படுத்தலாம்.
• விரிதாள் வடிவமைப்பும் தளவமைப்பும் அசலானதாகவே உள்ளன மற்றும் சிறப்பாகத் தோன்றுகின்றன-நீங்கள் எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும்.
• ட்ரீமேப், சூரியரம்மியம் மற்றும் நீர்வீழ்ச்சி விளக்கப்படங்கள் போன்ற புத்தம் புதிய விளக்கப்பட வகைகளைக் கொண்டு தரவை காட்சிசார்ந்து ஆராயுங்கள்.
தேவைகள்
Excel-இன் இப்பதிப்பு தொலைபேசிகளுக்கும் டேப்ளட்களுக்கும் கட்டமைக்கப்பட்டுள்ளது (10.1 அங்குலங்கள் அல்லது அதைவிடக் குறைந்த திரை அளவுடன்). அந்தச் சாதனங்களில், Excel விரிதாள்களை இலவசமாகக் காணலாம், உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம். மேம்பட்ட அம்சங்களைப் பயன்படுத்த, உங்களுக்கு தகுதியான Office 365 சந்தா தேவை. www.office.com/information-இல் மேலும் அறிக.
பெரிய டேப்ளட்கள், மடிக்கணினிகள் மற்றும் திரைப்பலகங்கள் ஆகியவற்றில் விரிதாள்களை இலவசமாகக் காணலாம். விரிதாள்களை உருவாக்கவும் திருத்தவும் தகுதியான Office 365 சந்தா தேவை. Office 365-இல் Word, Excel, PowerPoint, OneNote மற்றும் Outlook ஆகியவற்றின் சமீபத்திய திரைப்பலகப் பதிப்புகளும் உள்ளன-திரைப்பலகங்களிலும் மடிக்கணினிகளிலும் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. பயன்பாட்டிலேயே Office 365-க்காகப் பதிவுபெறலாம் மற்றும் நீங்கள் முதல் முறையாகப் பதிவுபெற்றால், ஒரு மாத இலவசத்தைப் பெறலாம்.
* தொலைபேசிகளுக்கான Continuum ஆனது Windows 10 பிரீமியம் தொலைபேசிகளில் மட்டுமே கிடைக்கிறது. HDMI உள்ளீட்டை ஆதரிக்கின்ற வெளிப்புற திரையகத்துடன் சேர்த்து, Continuum-இணக்கமான துணைக்கருவி தேவை.